சன்யாங் மாநகரின் இரண்டாவது கட்டுமானக் கூட்டு நிறுவனத்தில் 30க்கு அதிகமான ஆண்டுகளாகப் பணிபுரிந்த Liu Peng Fei தற்போது வண்டிகளை நிறுத்தி வைக்கும் இடத்தில் நிர்வாகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இங்கு, வேலைக்கு நான் பொறுப்பேற்கிறேன். கிடைக்கும் வருமானம் அதிகம். தொழிலாளர்களுக்கான தொழில் நிறுவனத்தின் அணுகுமுறை நன்று. மனநிறைவு அடைகிறேன். கவலை இல்லாமல் வேலை செய்கிறேன். வேலையை இழந்த போது, நான் கவலைப்பட்டேன். இங்கே வந்த பின், நானும் பயன் மிக்க மனிதன் எனும் எண்ணம் உருவாகி விட்டது என்றார் அவர்.
சன்யாங் மாநகரின் வெற்றியானது, வட கிழக்குச் சீனாவின் மூன்று மாநிலங்களின் அரசு தொழில் நிறுவனங்களின் வேலையற்ற தொழிலாளர் மறு வேலை வாய்ப்பை முழுமையாகப் பெறும் வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளது. அத்துடன், சீனாவின் மறு வேலை வாய்ப்பு பணிக்கு முன் மாதிரியாகவும் மாறியுள்ளது. 1 2 3 4
|