மறு வேலை வாய்ப்பு பெறுவதில், வயதானோர் இன்னல்படுகின்றனர். தொழில் நடத்தும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. தொழில் நிறுவனங்கள் அவர்களைச் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. இத்தகையோர், பொது நலத் துறையில் புதிய வேலை வாய்ப்பு பெற சன்யாங் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, வேலையற்றோர் பலர் சன்யாங் மாநகரின் குடியிருப்பு பிரதேசங்கள் மற்றும் வீதிகளுக்கு வந்து, பொதுப் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்கு, வீதி ஓரத்திலுள்ள புல் தரை மற்றும் பாதையை சீர் செய்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக, சுமார் 20 ஆயிரம் வேலையற்றோரின் வேலை வாய்ப்பு பிரச்சினை உரிய முறையில் தீர்க்கப்பட்டுள்ளது.
வேலையற்ற தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பைக் கண்டறிவதுடன், ஒவ்வொரு குடியிருப்பு பிரதேசத்திலும் மறு வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சி மற்றும் சேவை மையங்களைச் சன்யாங் மாநகராட்சி நிறுவியுள்ளது. அவர்களின் உழைப்புத் திறமையை வலுப்படுத்த இவை துணை புரியும்.
சன்யாங் மாநகரிலுள்ள 4 லட்சத்து 10 ஆயிரம் வேலையற்றோரில், சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் தற்போது வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
1 2 3 4
|