• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-01 16:48:36    
ஆடை உருவரைவாளர் சாங் தியன் ஐ அம்மையார்

cri
2003 ஆம் ஆண்டு துவக்கத்தில் நியூயார்க்கில், பருவ கால வண்ண ஆடை விழா நடைபெற்றது. வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற சீனரான சாங் தியன் ஐ அம்மையார் அழைப்பின் பேரில் அதில் கலந்து கொண்டார். சீனப் பாணியில் அமைந்த அவர் உருவரைந்த ஆடைகள், வெகுவாகப் பாராட்டப்பட்டன.

40 வயதான சாங் தியன் ஐ அழகானவர். சீர்மிகு உடல்கட்டுடையவர். சீனாவில் நன்கு விற்பனையாகும் இதழ்களின் அட்டைகளில் அவருடைய நிழற்படத்தை அடிக்கடி காணலாம்.

அவருடைய குடும்பத்தினர் மூன்று தலைமுறையாகத் தென் அமெரிக்காவில் வாழ்கின்றனர். இளம் வயதில் மேலை நாட்டுக் கல்வியை அவர் பயின்றார். சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். போர்த்துக்கீய மொழியும் அவருக்குத் தெரியும். 9 வயதில், உலகின் 5000 குழந்தைகளிலிருந்து பிரிட்டிஷ் ராயல் பாலே நடனக் குழுவுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 10 ஆண்டுக்காலம் பாலே நடனத்தில் ஈடுபட்டார்.

நான் பிரிட்டனில் பாலே நடனம் கற்ற போது, ஆடை உருவரைவு, மேடை உருவரைவு முதலியவற்றைக் கற்றுக்கொண்டேன். படிப்பு வாழ்க்கை மிகவும் கசப்பானது. எனவே, பாலே நடனம் தான் கற்க வேண்டும் என அப்போது நினைத்தேன். அப்போது பலவற்றைக் கற்றுக்கொண்டதால் இப்போது எனக்குத் தெரிவு உரிமை கிடைத்திருக்கிறது. இது நான் பெற்ற பேறு என்று சாங் தியன் ஐ கூறினார்.

1  2  3  4