• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-01 16:48:36    
ஆடை உருவரைவாளர் சாங் தியன் ஐ அம்மையார்

cri

தென் அமெரிக்காவில் பிறந்த சாங் தியன் ஐ அமெரிக்கா, பிரிட்டன், ஹாங்காங் முதலியவற்றில் வாழ்ந்து வந்தார். உலகின் பல்வேறு இடங்களில் வெவ்வேறான பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்ட மக்களுடன் நெருங்கிப் பழகினார். இதனால் அவருக்கு வளமிக்க வாழ்க்கை அனுபவம் கிடைத்திருக்கிறது. இவை, அவருடைய ஆடை உருவரைவுக்குத் தனிப்பட்ட தன்மையை விளைவித்துள்ளன.

மக்கள் அணிய வேண்டியது ஆடை. ஆகவே அவர்களுடைய விருப்பப்படி உருவரைய வேண்டும் என அவர் கருதுகிறார்.

அவர் சீனாவில் இருந்ததில்லை என்ற போதிலும், தம்மைச் சீனர் என்றே அவர் கருதுகிறார். உலக ஆடை வட்டாரங்களில் தமது நாட்டின் பண்பாட்டை நிலைநிறுத்தினால் தான், தமக்குரிய சிறப்பியல்பை வெளிக்காட்ட முடியும் என்று அவர் கருதுகிறார். 10 ஆண்டுகளுக்கு முன் அவர் ஹாங்காங் சென்று, சீன மொழி கற்றார். தற்போது அவர் சீன மொழியில் சரளமாகப் பேச முடிகிறது.

தற்போது பரவலாகும் எங்கள் பாணியில் பல்வேறு பகுதிகள் உண்டு. ஆனால் சீனர் என்பதை மறந்துவிடவில்லை. பூவேலைப்பாடு, சீன எழுத்துக்கள், சீனப் பத்திரிகைகள் போன்றவை நான் உருவரைந்த துணியில் அச்சிடப்படுகின்றன. மேலைநாட்டுப் பாணியில் அவற்றின் மாதிரி அமையலாம். ஆனால் சீனப் பண்பாட்டை நான் ஒருபோதும் நீக்கியதில்லை, நீக்கவும் மாட்டேன் என்றார் அவர்.

1  2  3  4