சிங்சியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசமானது, சீனாவில் சிறுபான்மைத் தேசிய இன மக்கள் குழுமிவாழும் முக்கியப் பிரதேசமாகும். அது, சிறுபான்மை இனத் தனிச்சிறப்பியல்பு மிக்கது. இயற்கை காட்சி எழில் மிக்கது. பாலைவனம், சோலை வனம், கோபி பாலைவனம், உறைபனி மலை ஆகியவை பரந்துபட்ட இப்பிரதேசத்தில் அமைந்துள்ளன. தவிர, சிங்சியாங்கில் பிரபலமான இயற்கை காட்சித் தலமான தியெசி, ஹொயெ மலை, புதௌகுவ் சியொஹ புராதன நகரம், நியாகு புராதன நகரம் உள்ளிட்ட வரலாற்றுக் காட்சித் தலங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் இடங்களாகும். இன்றைய சிங்சியாங்கில், கோடைகாலத்திலும் இலையுதிர் காலத்திலும் காணப்படும் அழகிய இயற்கைக் காட்சிகள் பயணிகளை ஈர்த்துள்ளன. குளிர்காலத்தில் அங்கு பனிச்சறுக்கு விளையாட்டு ஒரு சிறந்த தெரிவாகும் என்று கூறலாம். குறிப்பாக, சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உருமுச்சி நகரில், கடந்த 2 ஆண்டுகளில், உறைபனி மைதானங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன. அளவில் பெரிய, வசதியான இம்மைதானங்களில் சிறந்த சேவையை அனுபவிக்கலாம்.
1 2 3 4
|