• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-11 17:57:54    
சிங்ஹை திபெத் பீடபூமியின் தொழில் முனைவோர்

cri

கடந்த சில ஆண்டுகளில், சீனாவில், அரசு சாரா பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. அரசு சாரா மூலதனம் தேசியப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் பயன்படுகின்றது. அதேவேளையில், மேலதிகமான அரசு சாரா தொழில் முனைவோர், அரசு விவகாரங்களில் பங்கு கொள்கின்றனர்.

உறுப்பினர் தைவாங் சாஸி திபெத்தின் நாச்சு பிரதேசத்து ஆயர் மகன். தற்போது, திபெத் தன்னாட்சிப்பிரதேசத்தின், தொழிற்துறை வணிக சம்மேளனத்தின் துணைத் தலைவர். ஜொல்மோ லுங்மா குழுமத்தின் தலைமை இயக்குநர். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப்பணி துவங்கிய போது, கிராமப்புற தொழில் நிறுவனத்தைப் பெரிதும் வளர்ச்சியுறச் செய்யுமாறு நடுவண் அரசு எடுத்த வேண்டுகோளை முனைப்புடன் வரவேற்று செயல்படலானார். அதனால், சீனப் பொருளாதார சீர்திருத்தம் என்ற பேரோட்டத்தில் ஒரு செயல்வீரராக மாறியுள்ளார். அவரது ஜொல்மோ லுங்மா குழுமத்தின் அலுவலானது, சுற்றுலா, தாதுப்பொருள், கட்டிடம் முதலிய பல துறைகளுடன் தொடர்புடையது. திபெத்தில், அதற்குப் பல கிளைகள் உண்டு. அதன் மொத்த சொத்து மதிப்பு, பத்து கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

நானே, ஒரு மாற்றம் தான். அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக்கமிட்டியின் கூட்டத்தொடரில் அரசு விவகாரங்களில் பங்கு கொள்ளும் அரசு சாரா தொழில் நிறுவனத்தின் பிரதிநிதி எவரையும் முன்பு திபெத் அனுப்ப இயலாது. அரசு சாரா தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும், சீனத் தனித்துவம் வாய்ந்த சோஷலிச சந்தைப் பொருளாதார அமைப்பு முறையின் வளர்ச்சிக்கும் துணை புரிவதாக, நடுவண் அரசும் தன்னாட்சிப் பிரதேச அரசும் கருதுகின்றன என்றார் அவர்.

1  2  3  4