• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-03-11 17:57:54    
சிங்ஹை திபெத் பீடபூமியின் தொழில் முனைவோர்

cri

உறுப்பினர் ஹன் சிங்வாங், சிங் ஹை மாநிலத்தின் சாலா இனத்து சுன்ஹுவா தன்னாட்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 20 ஆண்டுகளாக, அரசு சாரா தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது சிங்வாங் குழுமம் கிராம நிலைக் கட்டுமானக் குழு என்ற தகுநிலையிலிருந்து பன்நோக்க குழுமக் கூட்டு நிறுவனமாகியுள்ளது. நீர்ச்சேமிப்பு, மின் உற்பத்தி, வீடு மற்றும் நிலச் சொத்து துறை, சுற்றுலா முதலியவை, அதன் அலுவலாகும். சிங் ஹை மாநிலத்தின் தலைசிறந்த அரசு சாரா தொழில் நிறுவனம், தேசிய நாகரிக கிராமப்புறத் தொழில் நிறுவனம் என, அது பாராட்டப்பட்டுள்ளது. அவரது கூட்டு நிறுவனம், எட்டு நீர்மின் நிலையங்களைக் கட்டியமைத்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 16வது மத்தியக் கமிட்டியின் மூன்றாம் முழு அமர்வு, பொருளாதார வளர்ச்சியின் தூண்களில் அரசு சாரா பொருளாதாரமும் ஒன்று என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, குடிமக்களின் சட்டப்பூர்வ தனிநபரின் சொத்து மீதான பாதுகாப்பில் அரசு மிகுதியும் கவனம் செலுத்தியுள்ளது. தொழில் நிறுவனங்களிடையே சமநிலை உண்மையில் நனவாகும். அரசு சாரா தொழில் நிறுவனங்கள் கவலையின்றி, வளர்ச்சிக்குப் பாடுபடலாம் என்றார் அவர்.

1  2  3  4