• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-01 09:32:51    
குவாங் சியின் சிறுபான்மைத் தேசிய இனப் பணி

cri

miao

சிறுபான்மைத் தேசிய இன மக்களின் கல்வி நிலை உயர்ந்தால் தான், தேசிய இனத்தின் வளர்ச்சியும் வளமும் கை கூடும் என்று நாங்கள் கருதுகிறோம். இதற்கென, தேசிய இனக் கல்வியைப் பெரும் முயற்சியுடன் வளர்ச்சியுறச்செய்வது என்பது மிக முக்கியமானதாகும். ஆகவே, கடந்த சில ஆண்டுகளில், எங்கள் தன்னாட்சிப் பிரதேசம் இதன் வளர்ச்சிக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் விளைவாக அடிப்படைக் கல்வி, இடைநிலைக் கல்வி, உயர் நிலைக் கல்வி, முதியோர் கல்வி, சிறப்புத் தொழில் நுட்ப பயிற்சி ஆகியவை உள்ளிட்ட தேசிய இனக் கல்வி அமைப்பு முறை உருவாகியுள்ளது என்று, இத்தன்னாட்சிப் பிரதேசத்தின் தேசிய இன விவகார ஆணையத்தின் துணைத் தலைவர் வான் பின் அம்மையார் கூறினார்.

குவாங் சி பிரதேசத்தில் குழுமி வாழும் பல சிறுபான்மைத் தேசிய இன மக்கள் தத்தம் சிறப்பு பாரம்பரியப் பண்பாட்டை உருவாக்கியுள்ளனர். தன்னாட்சிப் பிரதேச அரசு இதற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கின்றது.

கடந்த சில ஆண்டுகளில், இப்பிரதேசத்தில, சிறுபான்மைத் தேசிய இனப் பாரம்பரிய விளையாட்டு விழாக்கள் 10 முறை நடைபெற்றன. நான் நின் நகரில், சர்வதேச கிராமப்புறப் பாடல் விழாக்கள் 9 முறை நடந்தேறின என்றார் குவான் பின்.

1  2  3  4