• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-19 08:22:54    
வாரத்திலான விளையாட்டுச் செய்திகள்

cri

டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் ஒபன் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற ரஷியாவின் ஷரப்போவாவுக்கு ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி இல்லை என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அண்மையில் அறிவித்துள்ளது.

விம்பிள்டன் போட்டி முடிவடைந்த முன்னரே, போட்டியில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களின் பெயர் பங்கீடு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. விதியின் படி, ஒவ்வொரு பிரதிநிதிக் குழுவும் உலக பெயர் வரிசை பட்டியலிலான தன் முதல் நான்கு விளையாட்டு வீரர்களை அனுப்ப முடியும், ஆனால் ஷரப்போவா ரஷியாவில் எட்டாவது இடம் விகிக்கின்றார். எனவே ஏதென்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் தகுதி அவளுக்குக் கிடைக்கவில்லை என்று சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் பொது செயலாளர் ஜெவென்ஸ் தெரிவித்தார்.

உலக ஆடவர் டென்னிஸ் பெயர் வரிசை பட்டியலில் முதலிடம் பெற்றிருந்த சிலியின் புகழ்பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர் மசேலோ லியோஸ், இந்த விளையாட்டு துறையிலிருந்து விலகுவதாக 16ந் நாள் சந்தியாக்கோவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால், அவருடைய சுமார் 20 ஆண்டுகால டென்னிஸ் விளையாட்டு அனுபவம் முடிவுக்கு வந்துள்ளது. 1975ஆம் ஆண்டில் சந்தியாக்கோவில் பிறந்த அவர் 9வயதில் டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடத் துவங்கினார். 10 வயதில் சிறப்பு பயற்சியை ஏற்றுக்கொண்டார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் 19 சர்வதேச டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றார். 1998ஆம் ஆண்டில் அவர் அமெரிக்காவின் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் அகாசியைத் தோற்கடித்து, உலக ஆடவர் டென்னிஸ் விளையாட்டு வீரர் வரிசை பட்டியலில் முதலிடம் பெற்றார்.

1  2  3  4