• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-21 10:55:14    
கோடை கால மாளிகை

cri

வொசியான்க, துங்குங்மங் பகுதியிலுள்ள பாரம்பரிய கட்டடங்கள் உள்ளிட்ட பண்டைக் காலக் கட்டடங்கள் இப்பூங்காவில் கண்டுகளிக்கத் தக்கவை. வென்சுசென் மலையின் உச்சியில் அமைந்துள்ள வொசியான்க, இப்பூங்காவின் அடையாளம் ஆகும். அரச குடும்பத்தினர் வழிபாடு நடத்தும் இடமுமாகும். துங்குங்மங் என்பது, மாளிகையின் முன்வாயிலாகும். அதன் அருகில் கட்டியமைக்கப்பட்டுள்ள சில அரண்மனைகள், அரசர் அரசியல் விவகாரங்களைக் கையாள்வதற்கும் வசிப்பதற்கும் பொழுது போக்குவதற்கும் பயன்பட்டன. கோடை கால மாளிகையின் தனிச்சிறப்பு வாய்ந்த கட்டடங்களில் பெரிய கலை அரங்கம் குறிப்பிடத்தக்கது. இது, அரச உறுப்பினர் பெய்ஜிங் இசை நாடகத்தைக் கண்டுகளிக்கும் இடமாகும். சீனாவில் மிகப் பெரிய அரண்மனை கலை அரங்கம் இதுவாகும். பெரிய கலை அரங்கத்தின் 3 மாடிகளும் திறந்த முற்றத்துடன் இணைந்துள்ளன. அப்போதைய பெய்ஜிங் இசை நாடக நடிகர், கயிற்றைத் தன் உடம்பில் கட்டிக்கொண்டு, திறந்த முற்றம் மூலம் கீழே விழும் போது ஆகாயத்திலிருந்து தெய்வம், கீழே வருவது போல் தோன்றுமாம். அத்துடன், கலை அரங்கத்தின் அடிவாரத்தில் காலியாக உள்ள கிணறும் சதுர வடிவத்திலான 5 நீர் சேமிப்பு வாவிகளும், எதிரொலி ஏற்படுத்தும். இதன் விளைவாக, நடிகரின் குரல், பெரிதாகவும் உச்சரிப்பு தெளிவாகவும் இருக்கும் என்று வழிகாட்டி லீயூலின் கூறினார்.
1  2  3  4