• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-21 10:55:14    
கோடை கால மாளிகை

cri

இம்மாளிகையிலுள்ள குன்மிங் ஏரியின் வட கரையில், பல நூறு மீட்டர் நீள நடைக்கூடமொன்று உள்ளது. பயணிகள் ஓய்வு எடுக்கும் இடம் இது. அதன் மேலே, மலர்கள், பறவைகள் என பல பத்தாயிரம் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வேறு சில, வரலாற்று மா மனிதர் தொடர்பான கதைகள். இந்த ஓவியங்கள் அனைத்தும் உயிரோட்டம் மிக்கவை. நாள்தோறும் 20 ஆயிரத்துக்கு அதிகமான பயணிகள் கோடை மாளிகைக்கு வருகை தருகின்றனர். இதைக் கண்டு, வியப்படைகின்றனர். பாராட்டு தெரிவிக்கின்றனர். கோடைகால மாளிகையை மிகவும் விரும்புகின்றேன். இது தவறாது பார்க்கத் தக்கது. கோடைகால மாளிகை, புகழ்பெற்ற உலகப் பண்பாட்டு மரபுச்செல்வமாகும் என்பதால், அமெரிக்காவிலிருந்து இங்கு வந்திருக்கிறேன் என்று டேனியல் கிரீன் எனும் அமெரிக்கப் பயணி கூறினார். இப்பூங்காவிலுள்ள குன்மின் ஏரிக் கரையில், முதியோர் பலர் அமைதியாக நடந்துசெல்வதையும், தைஜிசியு என்னும் உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் காணலாம். 70 வயது வான் சன்வு என்பவர் பெய்ஜிங்கில் சுமார் 40 ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றார். நேரம் கிடைக்கும் போதெல்லாம், கோடைகால மாளிகைக்கு வருகிறார். பரந்துபட்ட இக்கோடைகால மாளிகையில், நீரும் மரங்களும் தூய்மையான காற்றும் செழுமையான பண்பாட்டுப் பின்னணியும் மிகுந்திருப்பதால், இங்கு வரவிரும்புகின்றேன் என்றார்அவர்.


1  2  3  4