சீனாவின் நெசவுத்தொழிலில், "இஸந்தே" என்பது சணல் நெசவுத் தொழிலிலான முதலாவது தொழில் சின்னம் என்று கருதப்படுகிறது. சீன இஸந்தே சணல் நெசவுத் தொழில் ஆடை கூட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கூ ச்சி சன் இத் தொழில் சின்னத்தை சீனாவின் பத்து தலைசிறந்த ஆடைத் தொழில் சின்னங்களில் ஒன்றாக உருவாக்கியுள்ளார்.
40 வயதான கூ ச்சி சன், ஹு னான் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்கு சணல் நெசவுத் தொழிலில் அவர் ஈடுபட்டு வருகின்றார்.
சீனாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள இம்மாநிலம், மழை வளம் நிறைந்து காணப்படுகின்றது. ஆறுகளும் ஏரிகளும் மிகவும் அதிகம். அதனால், சணல் நெசவுத் தொழிலின் மூலப்பொருளான நார்ச் செடி செழித்து வளர்கின்றது. இம்மாநிலத்தின் நார்ச் செடி உற்பத்தி, சீனாவில் 90 விழுக்காடு வகிக்கின்றது. நூற்றுக்கணக்கான அரசு சணல் நெசவாலைகள் அங்கு கட்டியமைக்கப்பட்டுள்ளன.
1 2 3 4
|