
ஆனால், சீனச் சந்தைப் பொருளாதார அமைப்பு முறையின் உருவாக்கம் மற்றும் முழுமைப்பாட்டுடன், புனரமைப்பு பணியில், பல அரசு தொழில் நிறுவனங்கள் இன்னலுக்குள்ளாயின. அரசு சாரா தொழில் நிறுவனங்களில் தயாராகும் உற்பத்திப் பொருட்களும் வெளி நாட்டு உற்பத்திப் பொருட்களும், இந்த அரசு தொழில் நிறுவனங்களில் தயாராகும் உற்பத்திப் பொருட்களுக்குப் பதிலியாக இருந்துள்ளன. இந்நிலைமையில், 1996ஆம் ஆண்டில் கூ ச்சி சன் அரசு தொழில் நிறுவனமான இஸந்தேவின் பொறுப்பாளர் பதவி ஏற்கலானார்.
அப்போது, இத்தொழில் நிறுவனத்தில் சுமார் 6000 பணியாளர் இருந்தனர். 3000 பேர் மட்டும் வேலை புரிந்தனர். ஆலை, கடனில் மூழ்கியிருந்தது. இத்தொழில் நிறுவனம் அரை உற்பத்தி நிலையில் இருந்தது. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு, இஸந்தே கூட்டு நிறுவனத்தை நிறுவ, மாநில அரசு ஒப்புக்கொண்டது. இந்நிலைமையில் நான் தலைமை பதவி ஏற்றேன் என்றார் அவர்.
1 2 3 4
|