முன்பு, தொழில் நிறுவன சீர்திருத்தத்தின் போது, கூ ச்சி சன் விடுமுறையே எடுக்கவில்லை. நாள்தோறும் அவர் தொழில் நிறுவனத்தில் பரபரப்பாக இருந்தார். தற்போது, தொழில் நிறுவனம் வளர்ச்சியடைந்துள்ளது. அவருக்கும் ஓய்வு நேரம் கிடைக்கிறது
ஆடை தயாரிப்பாளரான நாங்கள் கடைவீதியில், ஆடையை ஆராய விரும்புகின்றோம். ஆடை தயாரிப்புத் தொழில் தொடர்பான ஆய்வை நான் மிகவும் விரும்புகிறேன். பல்கலைக்கழகத்தில் பாடம் கற்பிக்கிறேன். முதுகலைப்பட்ட மாணவருக்குப் பாடம் கற்பிக்கிறேன் என்றார் அவர்.
ஹு நான் பல்கலைக்கழகத்தின் நிதி துறையில் பகுதிநேரப் பேராசிரியராக கூ ச்சி சன் பணி புரிகிறார். நெசவுத் தொழில் நடத்துவதில் பெற்ற அனுபவத்தை மாணவர்களுக்கு கற்பிக்க அவர் விரும்புகிறார். எதிர்காலத்தில் நெசவுத் தெழிலில் அவர்கள் ஈடுபட இது துணை புரியும் என்று கூ ச்சி சன் நம்புகிறார். 1 2 3 4
|