முதலில், உட்புறச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்தொழில் நிறுவனம் நடத்திய பள்ளியும் உணவு விடுதியும் மூடப்பட்டன. திறமையற்ற ஊழியர்களும், தொழிலாளரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர், சேவைத் தொழிலில் ஒரு பகுதியினரை வீட்டுக்கு அனுப்பினார். அதையடுத்து, உற்பத்திப் பொருட்களுக்கான வளர்ச்சி மற்றும் தொழில் நுட்பச் சீர்திருத்தத்தை முக்கிய பணியாக மாற்றினார். 1998ஆம் ஆண்டு முதல், இதற்கு ஆண்டுதோறும் 3 கோடி யுவானை அவர் முதலீடு செய்திருக்கிறார். பிரான்சிலிருந்து உருவரைவாளரை பெரும் ஊதியம் வழங்கிப் பணியில் அமர்த்தினார். உற்பத்திப் பொருளுக்கான வளர்ச்சியில் அவர்கள் நீண்டகாலமாக ஈடுபடுகின்றனர்.
சில ஆண்டுகளின் முயற்சி மூலம், முழுமையான தொழில் துறைத் தொடர் ஒன்று இஸந்தே கூட்டு நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மூலப் பொருள் முதல், நூல் நூற்றல், நெசவு, சாயம் தோய்த்தல், ஆடை வரை, உற்பத்திப் பொருட்கள் விரைவில் சந்தையில் விற்பனையாகின்றன.
1998ஆம் ஆண்டு முதல், புதிய அரசு நிலை சணல் வகை உற்பத்திப் பொருட்களில், பாதியளவு இந்நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு முதல், அரசு சொத்து 5 மடங்கு அதிகரித்துள்ளது என்றார் அவர்.
தற்போது, ஆண்டுதோறும் இதன் விற்பனை மதிப்பு 30 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. பிரிட்டன், தென் கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 20க்கு அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இதன் உற்பத்திப் பொருட்கள் விற்பனையாகின்றன.
1 2 3 4
|