
சீனாவின் தென் மேற்குப் பகுதியிலான யுன்னான் மாநிலத்தில் லீச்சியாங் நகரம் அணைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 2400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்நகரின் பரப்பளவு, 3.8 சதுரக் கிலோமீட்டராகும். அங்கு வாழும் 6200க்கும் அதிகமான குடும்பங்களில் பெரும்பாலோர் நாசி இனத்தவராவர். இந்நகரில் 30 விழுக்காட்டினர், செம்பு மற்றும் வெள்ளிப் பொருட்களின் தயாரிப்பு, ரோமம் மற்றும் தோல் பொருள் உற்பத்தி, நெசவுத் தொழில், மது வடிக்கும் தொழில் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்ட பாரம்பரிய கைத்தொழிலிலும் வணிகத் துறையிலும் ஈடுபடுகின்றனர். லீச்சியாங் நகரத்தை《உலகப் பண்பாட்டு மரபுச்செல்வப் பட்டிய》லில் சேர்ப்பதென யூநெஸ்கோ 7 ஆண்டுகளுக்கு முன் முடிவு மேற்கொண்டது. இப்பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், மேன்மேலும் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் இந்நகருக்கு வருகை தரலாயினர்.
1 2 3 4
|