
புராதன லீச்சியாங் நகரில், நாசி இனத்தின் துங்பா எழுத்துக்களை காணலாம். இனிமையான பழமை வாய்ந்த நாசி இசையை கேட்டுமகிழலாம். சீனாவில் தொன்மை வாய்ந்த நகரங்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, தென் கிழக்குச் சீனாவின் சோச்சுவான், பெய் இன மக்களின் நடையுடை பாவனைகள் மிகுந்த தாலி நகரம் முதலியவை குறிப்பிடத்தக்கவை. ஆனால், லீச்சியாங் நகரின் தனிச்சிறப்பியல்பு, துங்பா பண்பாட்டில் பிரதிபலிக்கின்றது. சித்திர எழுத்துக்களான துங்பா எழுத்துக்களும் நாசி இசையும் மக்களால் மறக்கப்பட முடியாதவை. துங்பா கிராமம், துங்பா பண்பாட்டின் உறைவிடமாகும். இப்பண்பாட்டைப் பேணிக்காக்கும் பொருட்டு, நாசி இனத் தலைமுறையினரான ஹசான்ஹொன், துங்பா கிராமத்தை நிறுவியுள்ளார். சில நூறு ஆண்டுகளுக்கு முன் நாசி இன மக்கள் வாழும் வீடுகளும் துங்பா மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. துங்பா கிராமத்தில் ஆண்டுக்கு ஒரு முறை, துங்பா வழிபாட்டு நடவடிக்கை நடைபெறுகிறது என்று அவர் கூறினார். லீச்சியாங் நகரில், தற்போது, துங்பா பண்பாட்டை நன்கு அறிந்துகொண்டுள்ள முதியோர் அதிகமில்லை. இப்பண்பாட்டைப் பாதுகாக்கும் வகையில், இக்கிராமத்திலுள்ள 40க்கும் அதிகமான இளைஞர்கள் இப்பண்பாட்டைக் கற்று உணர்ந்துவருகின்றனர். பயணிகள் பலர், லீச்சியாங் வருவதற்கு ஈர்ப்புத் தன்மை வாய்ந்த துங்பா பண்பாடு காரணமாகும். லீச்சியாங் நகரிலான போக்குவரத்து வசதி, சுற்றுலாவுக்குச் சிறந்த இடமாக மாற்றியுள்ளது என்று கூறுவது மிகையாகாது. 1 2 3 4
|