• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-02 10:56:02    
லீச்சியாங் நகரம்

cri

வெகு காலத்துக்கு முன்னர், சாமா பாதையில் அமைந்துள்ள முக்கிய நகராக லீச்சியாங் நகரம் திகழ்ந்தது. தெற்கு மற்றும் வடக்கு கால நிலை பெரிது வேறுபட்டதால், இந்நகருக்குத் தெற்கிலிருந்து வருகை தருவோர், வடக்கு நோக்கிச் செல்லவிரும்புவதில்லை. வடக்கிலிருந்து வருகை தருவோர் தெற்கு நோக்கிச் செல்லவிரும்பவில்லை. இதனால், லீச்சியாங் நகரில், பல்வேறு பண்பாடு கலந்த நிலைமை உருவாயிற்று என்று பல ஆண்டுகளாக, சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுவரும் ஹொ குவெய் லின் கூறினார். தென்-வட பிரதேசங்களின் பரிமாற்றத்தினால், பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. லீச்சியாங் நகரிலுள்ள வீதிகள், மலை மற்றும் ஆற்றின் அருகில் கட்டியமைக்கப்பட்டவை. செந்நிறக் கல்லால் ஆன இவ்வீதிகளில் மழை காலத்தில் சேறு சகதி கிடையாது. வறட்சி காலத்தில், தூசி இல்லை. கல்லில் செதுக்கப்பட்ட வண்ணப் படங்கள் அழகாக காட்சியளிக்கின்றன. நகரின் சூழ்நிலைக்கேற்ப இவை அமைந்துள்ளன. இந்நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்பாங் வீதி, தொன்மை வாய்ந்த வீதிகளின் எடுத்துக்காட்டாகும். இது, சுமார் 100 சதுர மீட்டர் பரப்புடைய சிறிய சதுக்கமாகும். வீதியின் இரு மருங்களிலும் கடைகள் அதிக அளவில் உள்ளன. ஸ்பாங் வீதி, லீச்சியாங் நகரிலுள்ள அனைத்து வீதிகளின் ஊற்று மூலமாகும். இவ்வீதியின் 4 திசைகளிலிருந்து 4 முக்கிய வீதிகள் உருவாகியுள்ளன. இவற்றிலிருந்து சிலந்தி வலைப் பின்னல் போல், கிளைகள் பல உருவாயின. லீச்சியாங் நகரம், பாலங்களின் அருங்காட்சியகம் எனலாம். நகரிலுள்ள யுஹ ஆற்றிலும் அதன் கிளைகளிலும் 350க்கும் அதிகமான பாலங்கள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.
1  2  3  4