சுன்யி மாவட்டத்தில், பத்து ஆண்டுகளாக, விவாசாயிகள் மிளகாய் பயிரிட்டு வருகின்றனர். இங்குள்ள, கால நிலை, மிளகாய் விளைச்சலுக்கு ஏற்றது. இதனால், இங்கு விளையும் மிளகாய் நல்ல செல்வாக்கு பெற்றுள்ளது. இதை உட்கொள்ள சீனர் மட்டுமல்ல, நேபாளம், இந்தியா, மியான்மர், தாய்லாந்து, ஜப்பான், ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் நுகர்வோரும் விரும்புகின்றனர். இதனால், ஆண்டுதோறும் இவ்விடத்து மிளகாயின் ஏற்றுமதி அளவு அதிகம்.
உள்ளூர் பிரதேசத்தில் விளையும் மிளகாய்க்கு விரிவான சந்தை உண்டு. சந்தை கருத்து படைத்த விவசாயிகள், உள்ளூர் அரசின் ஆதரவுடன், மிளகாய் தொழிலைப் பெரிதும் வளர்ச்சியுறச்செய்து வருகின்றனர். மிளகாய் பயிரிடுவது என்பது உள்ளூர் பிரதேசத்தின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.
1 2 3 4
|