மிளகாய் தொழிலின் வளர்ச்சியுடன், இம்மாவட்டத்தில் மிளகாயை மொத்தமாக விற்பனை செய்யும் சந்தை சிறப்பாக நிறுவப்பட்டது. கடந்த சில ஆண்டுக்கால வளர்ச்சி மூலம், உள்ளூர் பிரதேசத்தில் செல்வாக்கு மிக்க மிளகாய் விநியோக இடமாக இச்சந்தை மாறியிருக்கிறது. மார்ச் திங்களானது, மிளகாயின் அறுவடைக் காலமாகும். செக்கச் சிவந்த மிளகாயை விவசாயிகள் வண்டி வண்டியாக எடுத்து வந்து, இச்சந்தையில் குவித்தனர். இங்கிருந்து சீனாவின் இதர பிரதேசங்கள், உலகின் பல்வேறு இடங்கள் ஆகியவற்றுக்கு மிளகாய் ஏற்றிச் செல்லப்பட்டது. இச்சந்தையின் ஆண்டு விற்பனை அளவு சுமார் 60 ஆயிரம் டனாகும். விற்பனைத் தொகை 40 கோடி யுவானைத் தாண்டியுள்ளது. 1 2 3 4
|