இதை மேலும் முன்னேற்றுவிப்பதற்காக, மிளகாய் தொழில் பணியகத்தை சுன்யி மாவட்டம் சிறப்பாக உருவாக்கியுள்ளது. இப்பணியகத்தின் தலைவரான சென் வெய் சு கூறியதாவது:
"எங்கள் மாவட்டத்தில், மிளகாய் பயிரிடப்படும் பரப்பளவு 20 ஆயிரம் ஹெக்டரை எட்டியுள்ளது. மிளகாய் பயிரிடுவதன் மூலம், தமது வாழ்க்கை நிலைமையை விவசாயிகள் மாற்றியுள்ளனர். விவசாயிகள் மிளகாயை அறுவடை செய்த பின், சேமித்து வைக்கின்றனர். தமது குழந்தை, பள்ளிக்குச் செல்லும் போது அல்லது வீட்டைப் பழுது பார்க்கும் போது, அதை விற்பனை செய்கின்றனர். மிளகாய், விவசாயிகளின் லாபம் தரும் செந் நிற வங்கியாக மாறியுள்ளது" என்றார் அவர்.
1 2 3 4
|