மிளகாய் வர்த்தகத்தின் வளர்ச்சி மற்றும் சந்தை மயமாக்க நிலையின் உயர்வுடன், நகரில் சிலர் தரகர்களாகியிருக்கின்றனர். விவசாயிகளிடமிருந்து மிளகாயை கொள்வனவு செய்து, வெளியூருக்கு ஏற்றிச்சென்று விற்பனை செய்கின்றனர். யாங் ஷியாவ் யாங் என்பவர், மிளகாய் வியாபாரியாவார். அண்மையில் குடிபெயர்வதில் அவர் பரபரப்பாக ஈடுபட்டுள்ளார். தாழ்வான மண்குடிசையிலிருந்து, மாடிவீட்டுக்கு அவரின் குடும்பம் குடிபெயர உள்ளது. செந் நிற வங்கியினால், அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. அவர் கூறுகிறார்:
"கடந்த 10 ஆண்டுகளில், இந்நகரில் பெரும் மாற்றம் காணப்பட்டுள்ளது. முன்பு, ஒரு வீதி மட்டும் இருந்தது. இப்போது, 10 வீதிகள் அதிகரித்துள்ளன. மிளகாயைப் பயிரிடும் கருத்தை நகர தலைவர்கள் உட்புகுத்திய பின், எங்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிளகாய் பயிரிடுவதன் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். தற்போது, இந்நகரிலுள்ள குடி மக்களின் வாழ்க்கை நிலை, ஓரளவு வசதிப்படைத்த வாழ்க்கை நிலையை எட்டியுள்ளது." என்றார் அவர்.
1 2 3 4
|