சந்தை தகவல் மேலும் தங்குதடையில்லாமல் இருந்து, மிளகாய் வியாபாரிகளுக்கு மேலும் நல்ல வியாபார நிலைமை வழங்கும் வகையில், 1992ஆம் ஆண்டு முதல், நாள்தோறும் சந்தையில் சீன மிளகாய் வினியோகம் மற்றும் தேவை பற்றிய தகவலையும் விலை விவரத்தையும் உள்ளூர் அரசு வெளியிட்டு வருகிறது. அத்துடன், வேளாண் உற்பத்திப் பொருட்களின் தரக் கண்காணிப்பு மையம் உள்ளிட்ட துணை வசதிகளையும் நிறுவியுள்ளது.
தற்போது, மிளகாய் சந்தையானது, சீனாவின் மிளகாய் தளங்களில் ஒன்றாகும். அங்கு, மேன்மேலும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு வணிகர்கள் செல்கின்றனர். சீனாவின் புகழ் பெற்ற மிளகாய் பதனீட்டுத் தொழில் நிறுவனங்கள், உள்ளூர் மூலப் பொருட்களை விரும்பி, இங்குத் தொழிற்சாலைகளை நடத்துகின்றன. யாங் ஷியாவ் யாங் போன்ற 1500 மிளகாய் வியாபாரிகள் இருக்கின்றனர்.
1 2 3 4
|