1985ஆம் ஆண்டு முதல், மிளகாய் வர்த்தகத்தில் யாங் ஷியாவ் யாங் ஈடுபட்டுள்ளார். விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் தரமிக்க மிளகாயைப் பல்வேறு இடங்களுக்கு ஏற்றிச்சென்று, விற்கிறார். ஆண்டுக்குச் சுமார் 10 லட்சம் கிலோகிராம் அளவுக்கு வியாபாரம் செய்கிறார். இதன் விளைவாக, சாதாரண விவசாயியாக இருந்த அவர், முதலாளியாக மாறிவிட்டார்.
சந்தை விற்பனையில் ஈடுபடுவதால், விநியோகம் மற்றும் தேவை பற்றிய தகவல் தங்கு தடையில்லாமல் இருக்குமா என்பதில் வணிகர்கள் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். சந்தை நிலைமையை அறிந்து கொள்வதற்காக, அவர் கணிணி வாங்கினார். உள்ளூர் அரசு உருவாக்கிய சீன மிளகாய் இணைய தளத்தை அடிக்கடி திறந்து, தகவலைப் பெறுகின்றார். மிளகாய் சந்தையின் தகவல் வினியோக்கத்தைப் படிக்கின்றார்.
1 2 3 4
|