கூட்டு முதலீடு மற்றும் ஒத்துழைப்பில் கலந்து கொள்ளும் சீன வாகன உற்பத்தியாளர், அந்நிய வாகன உற்பத்தியாளரை வரவேற்கின்றனர். வாகன உற்பத்தி துறையில் சீனாவுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொழில் நுட்ப மற்றும் நிர்வாக இடைவெளியை, கூட்டு முதலீட்டு முறை குறைத்துள்ளது. சீனாவின் Dong Feng கூட்டு நிறுவனம், பிரெஞ்சு PSA Peugeot குழுமம் ஆகியவை கூட்டாக முதலீடு செய்து நிறுவிய வூ ஹான் Sheng Long மோட்டார் வாகன உற்பத்தி கூட்டு நிறுவனம், ஆண்டுதோறும் ஒரு வகை அழகான நடு நிலை காரைச் சந்தைக்கு வழங்குகிறது. Dong Feng கூட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் மியாவ் வெய் கூறியதாவது—
"கடந்த ஆண்டுகளில், மக்களின் கவனத்தை ஈர்க்கும் சாதனையை Shen Long கூட்டு நிறுவனம் படைத்துள்ளது. தொழில் நுட்ப நிலை உயர்ந்து வருகிறது. வாகன உற்பத்தி மற்றும் விற்பனை அளவு அதிகரித்துள்ளது. Dong Feng கூட்டு நிறுவனம் கார் உற்பத்தியை வளர்ச்சியுறச் செய்வதற்கு Shen Long கூட்டு நிறுவனம் அரிய அனுபவத்தைச் சேகரித்து, தீவிரமான சந்தைப் போட்டியில் சாதகமான நிபந்தனையை ஈட்டியுள்ளது" என்றார் அவர்.
1 2 3 4
|