சீனாவின் இறுதி பிரபுத்துவ வமிசமான சின் வமிசத்தின் உயர் குடி குடும்பத்தினரின் மகளை, கெ கெ என்று அழைப்பதுண்டு. 56 வயதான எழுத்தாளர் யெ குவான் சின் அம்மையார், ஒரு கெ கெ ஆவார். சீன இலக்கிய அரங்கில் சின் வமிச வழித்தோன்றல்களின் வாழ்க்கை பற்றி எழுதுவதில் பிரபலமாக விளங்குகிறார். 4 ஆண்டுகளுக்கு முன் அவர் வட சீனாவின் ஜின் லின் மலைத் தொடருக்குச் சென்று இயற்கையைப் பராமரிக்கும் உயிரின வாழ்க்கைச் சூழல் பற்றிய பல நாவல்களை இயற்றினார். இவை மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளன.
(சி ஹெ யுவான்)
யெ குவான் சின், சின் வமிசத்தின் ராணி குடும்பத்தைச் சேர்ந்த உயர் குடி குடும்பத்தில் பிறந்தவர். அவர் இளம் வயதிலேயே பெய்ஜிங்கின் அசல் கட்டிடமன "சி ஹெ யுவானில்" வாழ்ந்து சூழப்பட்ட முற்றத்துடன் கூடிய ஒரு வகை வீட்டு அமைப்பாகும்.
1 2 3 4
|