தமது குடும்பத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, சி ஹெ யுவானில் நிகழ்ந்த நடப்புகள் ஆகியவற்றை அவர் கண்டும் கேட்டும் உள்ளார். பின்பு, குடும்ப வரலாறு பற்றிய நாவல்களை அவர் எழுதுவதற்கு பெருவாரியான தரவுகளை இவை வழங்கியுள்ளன. இது பற்றி அவர் கூறியதாவது—
"என்னுடைய குடும்ப வரலாற்று நாவல்கள், முக்கியமாக சில குடும்ங்களின் தரவுகளைத் தோண்டியெடுத்து, அவற்றுக்கு இலக்கிய உள்ளடக்கத்தை வழங்கியுள்ளன. பழைய பெய்ஜிங்கின் தரவுகளையும் பழைய பெய்ஜிங் வீடுகளில் நிகழ்ந்த கதைகளையும் என் குடும்பத்தைச் சேர்ந்தோர் எவருமே எழுதித்தரவில்லை. நானே இதை எழுத முடிந்ததற்கு, பெய்ஜிங்கை விட்டுவிலகி வெளியேறியதே காரணம்" என்றார் அவர்.
அவருடைய உயர் குடி குடும்பத்தின் நிலை, அவருக்குச் சொல்லொனா துன்பத்துயரங்களையும் அனுபவத்தையும் வழங்கியுள்ளது. சின் வமிசம் வீழ்ச்சி அடைந்த பின் பெருவாரியான உயர் மக்கள், வீட்டுச் சொத்துக்களை விற்று வாழ்க்கை நடத்தலாயினர். இளம் வயதிலிருந்தே இத்துறையினருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பள்ளியில் பயின்ற போது, கல்விக் கட்டணம் கூட அவரால் செலுத்த முடியவில்லை. இதனால் அவர் தாழ்வு மனப்பான்மை உடையவராக விளங்கினார். உயர் குடியில் பிறந்து வளர்ந்ததால், 1968ல் கலாச்சாரப்புரட்சியின் போது பெய்ஜிங்கை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வட மேற்கு சீனாவின் ஷான்சி மாநிலத்தின் கிராமப்புறத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கு 36 ஆண்டுகள் உழவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் பன்றிகளை வளர்த்தார். தாதியாகி வேலை செய்தார். செய்தி முகவராகப் பணியாற்றினார். சின் காய்-திபெத் பீடபூமியிலும் ஷான்சியின் பெரிய மலைகளிலும் வசிக்க வேண்டி நேரிட்டது.
1 2 3 4
|