2000ல் சோ ச்சி எனும் பழைய மாவட்டத்துக்கு வந்து, அங்குத் தலைமை உறுப்பினராகப் பணியாற்றினார். அங்குள்ள எழில் மிக்க இயற்கை காட்சியும் நேர்மையான மக்களின் பழக்க வழக்கங்களும் அவருக்குப் பிடித்துப் போயின. அங்கு 4 ஆண்டுகள் தங்கியிருந்தார். மலைகளுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் நெருங்கிப் பழகினார். குறிப்புப்புத்தகத்தில் அவற்றை எழுதிவைத்தார். பொன் ரோமக் குரங்கு, ராட்சதப் பிண்டா, தென் சீன்ப் புலி ஆகியவை பற்றிய கதைகள் அவரை நெகிழச் செய்துள்ளன. தன்னுடைய மனம் தூய்மைப்படுத்தப்பட்டதாக அவர் கருதுகிறார். இது பற்றி அவர் கூறியதாவது—
"எழுத்தாளரைப் பொறுத்த வரை பழைய மாவட்ட நகருக்குச் செல்வது பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. என்னைப் பொறுத்து, குறைந்தது இது என் வாழ்வைத் தூய்மைப்படுத்தியுள்ளது. விலங்குகளின் கண் பார்வையிலும் இயற்கையின் கண் பார்வையிலும் இந்த உலகத்தையும் மனிதகுலத்தையும் என்னால் பார்க்க முடிந்தது" என்றார் அவர்.
1 2 3 4
|