சின் லின் இயற்கைப் புகலிடத்தைப் பின்னணியாகக் கொண்டு யெ குவான் சின் பல நாவல்களை எழுதி முடித்தார். "பழைய மாவட்ட நகர்", "புலி தாவு", "கரடி சு சுவான்", "குரங்கு கிராமத்துத் தலைவன்" உள்ளிட்ட பல நாவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நவீன சமுதாயத்தில் மனிதருக்கும் விலங்குகளுக்குமிடையிலும் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலுமுள்ள உறவை ஆழ்ந்து யோசிக்குமாறு இவை மக்களைக் கோரியுள்ளன. இயற்கை மீது நன்றி கொண்டதாக, மனிதகுலம் விளங்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். அவர் கூறியதாவது—
"இயற்கை மீதான இந்த நன்றியுணர்வு, பிள்ளைகள் தாய்மாரைப் பின்பற்றும் நன்றியுணர்வு போன்றது. மனத்தூய்மையானது, சுற்றுச்சூழல் தூய்மைக்கு மிக அடிப்படை அத்திவாரமாகும். இது தான், சோ ச்சிவிலான எனது 4 ஆண்டு வாழ்க்கையின் யோசனையாகும்" என்றார் அவர்.
யெ குவான் சின்னின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. ஆனால் அங்கள்ள மக்கள் அவரை விட்டுப்பிரிய விரும்பவில்லை. இதனால் அவர் தொடர்ந்து சோ ச்சிவில் தஹ்கியிருக்கிறார். ஜப்பானில் உள்ள அவருடைய கணவரும் மகளும் அவரை நன்கு உணர்ந்து கொண்டிருப்பது புலனாகின்றது. 1 2 3 4
|