
ஹெய்ஹொ ஆறு, டியான்ஜின் மாநகரப் பகுதிக்கூடாகச் செல்கிறது. டியான்ஜின் மாநகரின் தாய் ஆறு என்று அது போற்றப்படுகின்றது. இவ்ஆற்றினால் இந்நகரம் வளர்ச்சியடைந்துள்ளது. சுமார் 1000 கிலோமீட்டர் நீளமுடைய இந்த ஆறு, வட சீனாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். அதன் மேற் பகுதியில் 9 கிளைகள் உள்ளன. விசிறி வடிவத்தில் அமைந்த இக்கிளைகள் டியான்ஜின் மாநகருக்கு ஊடாக ஓடி, கடலில் கலக்கின்றன. ஆற்றின் இரு கரைகளும் டியான்ஜின் மாநகரில் மிகவும் பரபரப்பான இடமும் காட்சித் தலமும் ஆகும்.

தோணியில் ஏறி, இரு கரையிலான காட்சியைக் கண்டுகளிப்பது என்பது, பயணிகளின் முதன்மைத் தெரிவாகும். கப்பலில் அமர்ந்த வண்ணம், இவ்வாற்றின் இரு கரைகளிலும் அமைந்த வெளிநாட்டுப் பாணியிலான கட்டடங்களைப் பார்வையிடுவது என்பது ஹெஹொ ஆற்றுப் பிரதேச சுற்றுலாவில் முக்கியமாக இடம்பெறுகின்றது. வரலாற்றில், டியான்ஜின் மாநகரில் வெளிநாடுகளின் கன்சலேட், வணிகச் சங்கம் ஆகியவை மிகுதியாக இருந்தன. இரு கரையிலுமுள்ள ஐரோப்பிய பாணியில் அமைந்த கொம்பு வடிவ அல்லது வட்ட வடிவக் கட்டடங்களின் நிழல், ஆற்று நீரில் தென்படுவதைத் தோணியில் அமர்ந்த வண்ணம் கண்டு களிக்கலாம். இவற்றைப் பார்வையிடும் போது, ஐரோப்பாவின் ஒரு ஆற்றுப் பிரதேசத்தில் சுற்றுலா மேற்கொள்வது போன்று உணர்வு ஏற்படலாம். 1 2 3 4
|