
ஆற்றுக் காட்சியைப் பார்வையிடும் அதே வேளையில், டியான்ஜின் மாநகரின் மாற்றத்தையும் கண்டறியலாம். வார இறுதியில், ஹெய்ஹொய் ஆற்றுப் பிரதேச சுற்றுலா நெறி, அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. இவர்களில், முதியோரும் பெற்றோருடன் பயணம் மேற்கொள்ளும் துவக்கப் பள்ளி மாணவரும் அதிகமாக இடம்பெற்றுள்ளனர். டியான்ஜின் மாநகரின் மாற்றத்தையும் ஹெய்ஹொ ஆற்றின் இரு கரை காட்சியையும் கண்டுகளிக்கவே, நான் இங்கு வந்திருக்கிறேன் என்று டியான்ஜின் பல்கலைக்கழக நூலகத்தின் பணியாளர் லீசியான் கூறினார்.

ஹெய்ஹொ ஆற்றைச் சுற்றுலா ஆறாக மாற்றும் பொருட்டு, டியான்ஜின் மாநகரில், இவ்வாற்றின் நெடுகிலும் பன்னோக்க வளர்ச்சித் திட்டப்பணி நடைபெற்றுவருகின்றது. இதில், பூங்கா, சதுக்கம் ஆகியவற்றின் கட்டுமானப் பணி இடம்பெற்றுள்ளது. நீர் வழி நெறிகள், போக்குவரத்துக்குத் திறந்துவிடப்படும். சுற்றுலாவின் உள்ளடக்கம் அதிகரிக்கப்படும். ஹெய்ஹொ ஆற்றுப் பிரதேச சுற்றுலா மையத்தின் பணியாளர் லியூச்சின்யுன் கூறியதாவது, ஹெய்ஹொ ஆற்றை உலகின் புகழ்பெற்ற ஆறாக மாற்ற டியான்ஜின் நகராட்சி அரசு பெரிதும் பாடுபட்டுவருகின்றது. 1 2 3 4
|