
2005ஆம் ஆண்டு, சீரமைப்புப் பணி நிறைவடைந்த பின், இவ்வாற்றின் இரு கரையும் மேலும் அழகாக காட்சி தரும். அத்துடன், இங்குள்ள சுற்றுலாத் துறைக்கும் புதிய வாய்ப்பு கிடைக்கும். அப்போது, மேலும் அதிகமான பயணிகள் வருகை தருவர். ஹெய்ஹொ ஆற்றை அடிப்படையாகக் கொண்டு, பயணிகளின் கோரிக்கைக்கிணங்க, சுற்றுலா நெறியை அதிகரித்து, டியான்ஜின் மாநகரின் எழில் மிக்க இயற்கை காட்சியை அதிக அளவில் சீன மற்றும் வெளி நாட்டுப் பயணிகளிடம் அறிமுகப்படுத்துவோம் என்றார் அவர். இவ்வாற்றின் நுழைவாயில், நீல நிற வானம், கடல், வெண்ணிற கடலலை, பறக்கும் பறவைகள் ஆகியவை பயணிகளுக்குப் புதிய உணர்வை ஏற்படுத்தும் என்று நம்பலாம். 1 2 3 4
|