
தற்போது இவ்வாற்றின் இரு கரையிலும், இத்தாலி மற்றும் ரஷிய பாணியில் அமைந்த கட்டடங்கள் காணப்படுகின்றன. பிரெஞ்சு பாணியில் அமைந்த கட்டடங்கள் கட்டியமைக்கப்பட்டுவருகின்றன அல்லது மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. இக்கட்டடங்கள் கட்டியமைக்கப்பட்ட பின், இரு கரை காட்சி மேலும் அழகாக இருக்கும் என்று டியான்ஜின் மாநகரின் சுற்றுலா வளர்ச்சிக் கமிட்டி அலுவலக அதிகாரி ஜின்தியெலின் கூறினார். 600 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டியமைக்கப்பட்ட பிரெஞ்சு பாணி கட்டடங்களில், ஹொமொபாங் பொழுதுபோக்கு மையம், பிரெஞ்சு பாணியில் அமைந்த பூங்கா, பிரான்சின் தனிச்சிறப்பு வாய்ந்த பாலம், பிரெஞ்சு பண்ணை வடிவ குடியிருப்பு பிரதேசம் ஆகியவை இடம்பெற்றுள்ளன என்றார் அவர்.

ஹெய்ஹொ ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்பட்ட மாற்றங்களை டியான்ஜின் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். முதியவர் ஊலிமிங், பயணத் தோணித் தலைவராவார். ஆற்றின் மாற்றத்துக்குச் சாட்சியாளரும் ஆவார். 1970ல் இப்பணியில் ஈடுபட்டேன். அப்போது, இவ்வாற்றின் இரு கரைகளிலும் உயரமான கட்டடங்கள் மிகவும் குறைவு என்றார் அவர். ஆற்றின் இரு கரைகளிலும் ஏற்பட்ட மாபெரும் மாற்றங்கள் டியான்ஜின் மக்கள் பெருமைப்படத் தக்கவை. இதனால், அவர்களில் பலர் இவ்விடத்துக்கு வருகை தர விரும்புகின்றனர்.
1 2 3 4
|