
தற்போது, 20 கறவைபசுக்களையும் 40 ஆடுகளையும் பான் பூ சோவ் குடும்பம் வளர்த்துள்ளது. டிராக்டர் வண்டி, புல் வெட்டித்தள்ளும் இயந்திரம் ஆகியவற்றை வாங்கி, பச்சை தீனியை சேமித்து வைக்கும் கிடங்கை அவரது குடும்பம் அமைத்துள்ளது. மனைவி சு லா, வீட்டைத் துப்புரவு செய்கிறார். எனவே அவர்களின் வீட்டிலும் முற்றத்திலும் தூய்மையான அழகான காட்சி காணப்படுகிறது. சில சமயத்தில் மேலை நாட்டு பாணி உணவை அவர் சமைக்கிறார். அவர்களின் மகன் தேவ தூதர் போல் காணப்படுகிறது. பெற்றோர் வளர்த்த கறவைபசுக்களைப் பார்த்ததும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். சு லாவின் தாய்மார் அவர்களைப் பார்க்க, சீனாவுக்கு வந்திருந்தார். தம் மகளும் மாப்பிள்ளையும் இன்பமான வாழ்க்கை நடத்துவதைக் கண்டு, அவர் மகிழ்ச்சி கண்ணீர் வடிந்தார்.
1 2 3 4
|