
அவர்களின் இன்பமான வாழ்க்கை இப்போது தான் தொடங்குகிறது என்று அவர் கூறினார். இவ்வாண்டு புதிய கொள்கையை அரசு கடைப்பிடிப்பதால், விவசாயிகளின் சுமை மேலும் குறைந்துள்ளது. முன்னர் அவர் குடும்பம் ஆண்டுதோறும் 800, 900 யூவான் வரி செலுத்த வேண்டியிருந்தது. இவ்வாண்டு மொத்தமாக 300 யூவான் வரித் தொகையை அவர் செலுத்தினார். முன்பு விளை நிலமாக இருந்த வனப்பிரதேசத்தில் மரம் நட்ட பின், விவசாயிகளுக்கு உணவு தானியத்தை அரசு நட்ட ஈடாக வழங்கியுள்ளது. மலையில் மரம் நட்டு, வருமானம் பெறலாம். அரும்பாடுபட்டால், மேன்மேலும் இன்பமான வாழ்க்கை அனுபவிக்கலாம். மேலும் பெருமளவில் கறவைபசுக்களை வளர்க்க வேண்டும் என, தன் மனைவியுடன் கலந்தாலோசித்து அவர் தீர்மானித்தார்.
1 2 3 4
|