
நாங்கள் பணம் சேமித்து, கூடுதலான பசுக்களை வளர்க்க வேண்டும் என்று விரும்புகிறோம். 40, 50 பசுக்களையாவது வளர்ப்போம் என்றார் பான் பூ சோவ்.
பான் பூ சோவும் அவரது வெளிநாட்டு மனைவியும் அயராத உழைப்பு மூலம் வளமடையும் நிகழ்ச்சி உள்ளூர் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. முன்பு உள்ளூர் மக்கள் வயலில் பயிரிடுவது வழக்கம். இப்போது, அவர்கள் பான் பூ சோவ் போல், கறவைபசுக்களையும் ஆடுகளையும் வளர்க்க துவங்குகின்றனர். கிராமத்தில், தற்போது, 60 விழுக்காட்டு குடும்பங்கள் கறவைபசு மற்றும் ஆடுகளை வளர்க்கலாயின. கிராமவாசிகளின் வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கிறது என்று, பான் பூ சோவ் மகிழ்ச்சியுடன் செய்தியாளரிடம் கூறினார். 1 2 3 4
|