சீனாவின் புச்சியன் மாநிலத்தின் தலைநகரான புச்சோ நகரில், யென் ஆன் இடைநிலைப் பள்ளி அமைந்துள்ளது. புரச்சிகர புனித இடமான யென் ஆன் பெயரால் சூட்டப்பட்ட இப்பள்ளி, சாதாரண இடைநிலைப் பள்ளியாகும். யென் ஆன் எழுச்சியின் ஊக்கத்தினால் இப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளில், ஒழுக்கநெறிக் கல்வியை வெகு சிறப்பாகப் போதித்து வருகிறது. யென் ஆன் எழுச்சி என்றால் என்ன? இது பற்றி இப்பள்ளியின் தலைவர் ஓங் சின் ஷ் கூறியதாவது—
"கடின போராட்டம் என்பது தான், யென் ஆன் எழுச்சியின் சாராம்சமாகும். இப்போது பொருளாதார வசதிகள் ஓரளவு சீராக உள்ளன. சமூக சூலும் சிறப்பாக உள்ளது. இத்தகைய நிலையில் எமது குழந்தைகள் மிக இன்பமாக வாழ்கின்றனர். ஆனால், மற்றொரு கண் கொண்டு பார்த்தால் கடின போராட்ட எழுச்சி அவர்களிடம் குறைவு. வாழ்க்கை மூலம் துன்பம் அனுபவிக்கத் தெரிந்தவர் தான், கல்வியிலும் பின் சமூகத்திற்குள் நுழைந்த பின்னும் போராட முடியும் என்று கருதுகிறோம். இப்படிப்பட்ட மாணவர் எதிர்காலத்தில் சமுதாயக்கு உணர்வுப்பூர்வமாகத் தொண்டு புரிய முடியும் என்று கருதுகிறோம்" என்றார் அவர்.
1 2 3 4
|