
யென் ஆன் இடைநிலைப் பள்ளியானது, கடின போராட்ட எழுச்சையை மாணவருக்கு கற்றுத் தருகிறது. அன்றி, பள்ளிக்கு வெளியே சமூகத்துக்கு மாணவர்களைக் கூட்டிச் செல்கின்றது. தொழிலாளர் விவசாயிகள் விடுதலைப் படை வீரர்கள் ஆகியோருடன் ஒன்றாக வாழ்ந்து ஒன்றாக கல்வி பயில்வதுன் மூலம் மாணவர்கள் சமுதாயத்தை மேலும் நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. புரட்சிகர பாரம்பரிய கல்வியை வலுப்படுத்தும் பொருட்டு, மாணவர் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகளை புரட்சிகர இடமான யென் ஆனுக்கு அனுப்புகிறது. இப்பிரதிநிதிகள் பள்ளியின் மண்ணையும் மாணவர்கள் தாமே வளர்த்த மரக்கன்றுகளையும் அங்கு கொண்டு போனார்கள். மாணவர் எவ்வாறு கடின போராட்ட எழுச்சியில் ஊன்றி நிற்பது என்பது பற்றி அங்குள்ள இடைநிலைப் பள்ளி மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மா தே துங், சூ தெ, சோ என் லாய் உள்ளிட்ட முதிய தலைமுறை தலைவர்கள் சீனப் புரட்சியை ஆணையிட்ட யென் ஆன் பௌ தா மலையடிவாரத்தில் தாம் கொண்டு போன மரக்கன்றுகளை மாணவர் நட்டனர். பள்ளியின் மண்ணைப் போட்டனர். யென் ஆன் புரட்சிகர வரலாற்று அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதன் மூலம், யென் ஆன் இடைநிலைப் பள்ளி மாணவரின் கடின போராட்ட சுய உணர்வை உயர்த்தியுள்ளது. மாணவி ஓ ஜின் கூறியதாவது—
"யென் ஆன் மக்களாக இருந்து, யென் ஆன் ஆத்மாவை வார்த்தெடுப்பது என்ற நடவடிக்கையில் பங்கு கொள்வதன் மூலம், என் கடின போராட்ட எழுச்சியை உயர்த்தியுள்ளேன். கடின போராட்டம் என்பது, யென் ஆன் எழுச்சியின் தனிச்சிறப்பியல்புகளில் ஒன்றாகும். தற்போது எங்களின் வாழ்க்கை மற்றும் கல்வி வசதிகள் மிகவும் சிறப்பாக உள்ள போதிலும், கடின போராட்டம் என்ற யென் ஆன் எழுச்சியை நாங்கள் தொடர்ந்து வெளிக்கொணர வேண்டும்" என்றார் அவர்.
1 2 3 4
|