புச்சோ நகர யென் ஆன் இடைநிலைப் பள்ளி கடந்த சில ஆண்டுகளில் பயிற்றுவித்த மாணவர்களில் பள்ளியில் இன்னும் கல்வி பயிலும் மாணவர்கள் மட்டுமல்ல, பட்டம் பெற்ற மாணவர்களும் கூட யென் ஆன் எழுச்சியை வெளிக்கொணர்வதன் மூலம், தமது செயலுக்கு வழிகாட்டியுள்ளனர். எடுத்துக்காட்டாக, மியௌ டு என்னும் மாணவர், பட்டம் பெற்ற பின், பள்ளிக்கு அனுப்பிய கடிதத்தில் பள்ளி துவக்கிய யென் ஆன் எழுச்சி பற்றி எடுத்துரைத்தார். "பள்ளி ஆதரித்துப் பேசும் கடின போராட்டம் என்ற யென் ஆன் எழுச்சியினால் நான் ஊக்கம் பெற்றேன். இதனால் நான் செய்யும் பணி இடைவிடாமல் வளர்ச்சியுற்று வளமடைந்துள்ளது" என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். பணியில் சாதனை நிகழ்ச்சிய பின், இப்பள்ளிக்கு கைம்மாறாக, அவர் 50 லட்சம் யுவான் நன்கொடை வழங்கி, பள்ளிக்காக ஒரு விளையாட்டுக் களரியை கட்டியமைத்தார். இதுவே கடின போராட்ட எழுச்சியைக் கொண்டு மாணவருக்குக் கற்றுக்கொடுத்ததன் விளைவாகும்.
யென் ஆன் எழுச்சியின் வழிகாட்டலில் யென் ஆன் இடைநிலைப் பள்ளி தன் பணியில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் அதன் கல்வித் தரம் புச்சோ நகரில் முன்னணியில் இருக்கிறது. குறிப்பாக, ஜுனியர் பள்ளியின் கல்வித் தரம் மூன்றாவது இடம் வகிக்கிறது. பள்ளி ஆசிரியர்தம் முயற்சியுடனும் யென் ஆன் கடின போராட்ட எழுச்சியின் வழிகாட்டலிலும், மியௌ டு போன்ற திறமைசாலிகளை யென் ஆன் இடைநிலைப் பள்ளி பயிற்றுவிக்கும் என்று நம்புகிறோம். 1 2 3 4
|