
யென் ஆன் இடைநிலைப் பள்ளி 75 ஆண்டு வரலாறுடையது. இப்பள்ளியில் 2728 மாணவர் கல்வி பயில்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர், அவர்தம் பெற்றோருக்கு ஒரே பிள்ளைகள் தாம். கடந்த சில ஆண்டுகளில், புகழ்பெற்ற வர்த்தக சின்னம் கொண்ட மிதி வண்டிகளில் பள்ளி சேல்லும் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. நவ நாகரிகமாக உடை உடுக்கும் மாணவர் எண்ணிக்கையும் முன்பை விட அதிகமாகும். ஆடம்பட வாழ்க்கையை நாடும் மாணர்களும் உள்ளனர். இந்நிலைமையில் இப்பள்ளி எவ்வாறு மாணவருக்குக் கற்றுத்தருவது? எவ்வாறு கடின போராட்ட எழுச்சியை அவர்களுக்கு ஊட்டுவது என்பது பற்றி இப்பள்ளியின் ஒழுக்க நெறிக் கல்வி துறையின் தலைவர் ஆசிரியர் ஓங் சின் ஹுவா கூறுகிறார்—
"அரசியல் கல்வி, சிந்தனைக் கல்வி, நம்பிக்கைத் தன்மை கல்வி, ஒழுக்க நெறிக்க கல்வி ஆகிய 4 துறைகளில், ஒழுக்க நெறிக் கல்லவி பள்ளியில் நடைபெருகின்றது. புதிய காலகட்டத்தில் இதை எவ்வாறு மாணவருக்கு நடத்துவது என்பது எங்களுக்கு ஒரு புதிய சோதனையாகும். யென் ஆன் எழுச்சியால் மாணவருக்குப் போதனையளிப்பது என்பது எங்களின் பணியின் பாரம்பரியமாகும். புதிய காலகட்டத்தில், மாணவர் ஒரு சரியான நுகர்வுக் கண்ணோட்டத்தை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதோடு, அவர்கள் சரியாக நுகர்வும் வழிகோலுகிறோம்" என்றார் அவர்.

ஒழுக்க நெறி ஆசிரியரின் வழிகாட்டலில் மாணவர்கள் வகுப்பு என்ற முறையில், கடின போராட்டத்தை ஆதரித்துப் பேசும் இயக்கத்தை நடத்துகிறோம். "நவ கால கடின போராட்டத்தின் வெளிப்பாடுகள் யாவை?" என்ற தலைப்பில் மாணவர் கட்டுரை எழுத வேண்டும். மாணவர் அனுபவத்தின் மூலம் மாணவருக்கு இப்பள்ளி போதனை அளிக்கிறது.
1 2 3 4
|