• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-10-19 09:19:27    
சீனத் தேசிய இசை ராணி சொங் வெய்

cri

சீன இசைக் கல்லூரியில், கருவி இசை துறையில் ஆசிரியராக சொங் வெய் பணி புரிகிறார். வயது 35. சீனத் தேசிய இசை அரங்கில் ஒளிவீசும் நட்சத்திரமாக விளங்கியவர்.

5, 6 வயதிலிருந்தே ரெகு எனும் இசைக் கருவியை இசைக்கத் துவங்கினார். துவக்கத்தில் மாணவர்கள் தன் தந்தையிடம் இசைக் கருவியை இசைத்ததைக் கேட்டு ரசித்தார். இவ்வருமையான இசையைக் கேட்டு அவர் சுயமாக ரெகுவை இசைக்கக் கற்றுக்கொண்டார். அதைக் கண்ட அவருடைய தந்தை, அவருக்கும் கற்பித்தார். 7 வயதான போது, தன் குடியிருப்புப் பிரதேசத்தின் பெரிய மண்டபத்தில் அவர் முதன்முறையாக மேடையில் ஏறி ரெகுவை இசைத்தார். இது பற்றி அவர் கூறியதாவது—

என் தகப்பனார் எனக்காக வானம்பாடி எனும் இசையை ஏற்பாடு செய்தார். அரங்கில் பெகுவின் இரண்டு நாண்கள் சரியில்லை என்று கண்டறிந்து பயந்து போனேன். என் தகப்பனார் திரைக்குப் பின் என்னைப் பார்த்ததைக் கண்டு அரங்கிலிருந்து இறங்கினேன். அவர் இதைச் சரிப்படுத்திய பின், "போகட்டும். பயப்பட வேண்டாம்" என்று கூறி எனக்கு ஊக்கமளித்தார். பின் நான் அரங்கிற்குத் திரும்பி ரெகுவை இசைக்கலானேன் என்றார் அவர்.

1  2  3  4