அப்போது முதல் அவர் தன் தகப்பனார் கூறியது போல, அரங்கில் இசை கருவியை இசைப்பதை விரும்பினார்.
1991ல் சீன இசைக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின் சீன மத்திய தேசிய இசைக் குழுவில் தனியாக இசைப்பவராக சொங் வெய் பொறுப்பேற்றார். அப்போது அவர் அடிக்கடி அரங்கில் இசை இசைத்தார். சீனத் தேசிய இசையை வளர்ச்சியுறச்செய்ய வேண்டுமாயின், இதைப் பரப்ப மேலும் கூடுதலானோர் தேவைப்படுகின்றனர் என்று அவர் கருத்து தெரிவித்தார். சீன மகளிர் ஐ யொ இசைக் குழுவில் அவர் சேர்ந்தார். குழுவினருடன் சேர்ந்து பல பல்கலைக்கழக்ங்களுக்குச் சென்று அவர்களுக்கு இலவசமாக கலை நிகழ்ச்சி நடத்தினார். மேலும், அவர் பல புதிய இசைப் படைப்பை படைத்தார். இதனால் பலர் ரெகுவுக்கு அறிமுகமாயினர்.
1998ல், வியட்நாமில் அவர் இசைநிகழ்ச்சி நடத்தினார். வெறும் மலையில் பறவைகளின் பாடல், ரெ சியன் என்னும் ஊற்று நீரில் காணப்படும் நிலா ஆகிய இரண்டு இசையும், அந்நிய நேயர்களின் மனதை நெகிழச்செய்தன.
1 2 3 4
|