சொங் வெய் சீன இசைக் கல்லூரிக்குத் திரும்பிய பின், அரங்கிற்கு அப்பால் உள்ளார் போலும். அவர் பற்றிய செய்திகள், செய்தி ஊடகங்களில் அவ்வப்போது இடம்பெறுவதுண்டு. சீனாவின் புகழ்பெற்ற தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளரை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உண்டு. அவர் கல்லூரியில் பாடம் கற்பிப்பதுடன், ரெகு பரவல் மற்றும் கல்விக்கான ஒரு தொகுதி வி. சி. டியை வெளியிட்டார். முற்காலம் முதல் இது வரை தாம் இசைத்த 100 ரெகு இசையைத் தயாரித்திருக்கிறார்.
பாடம் கற்பிப்பது, இசை நிகழ்ச்சியை நடத்துவது ஆகியவற்றுடன் தேசிய இசை தத்துவத்தையும் அவர் தொகுத்து ஆராய்ந்தார். தேசிய இசைக் கருவிகளை வாசித்தல், அரங்கேற்ற நூண்கலை ஆகியவை பற்றி ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
அவர்தம் மாணவர்களில் சிலர், உள்நாட்டு வெளிநாட்டு போட்டிகளில் தலைசிறந்த சாதனை ஈட்டியுள்ளனர். இது, இசை வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1 2 3 4
|