1998, 98 ஆண்டுகளில் சீன வசந்த விழாவின் போது, பொன்னிற பெரிய மண்டபத்தில் அவர் ரெகுவை இசைத்தமையினால் சீனத் தேசிய இசை வட்டாரத்திலும் கலைநிகழ்ச்சி சந்தையிலும் அவருடைய தகுநிலை மேலோங்கியுள்ளது. இருப்பினும், எவரும் எதிர்பாராத வகையில் அவர் ஒரு முடிவு மேற்கொண்டார். தமது தாய் கல்லூரியான சீன இசைக்கக் கல்லூரிக்குத் திரும்பி ஆசிரியராகப் பணிபுரிவது என்பது தான் அந்த முடிவு. அவர் கூறியதாவது—
ஒருபுறம் என் தகப்பனார் போன்ற தன்னலமற்ற ஆசிரியரை மதிக்கிறேன். மறுபுறம், தேசிய இசைக்கு உண்மையில் வழித் தோன்றல்கள் தேவைப்படுகின்றனர். எனவே, உடல் ரீதியில் மேலோங்கி வளரும் அதே வேளையில் சிந்தனை ரீதியிலும் மேலோங்கி வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கல்விப் பணியானது, ஒருபுறம் சிந்தனையிலும் இசை நுட்பத்திலும் மாணவர்களுக்குக் கற்பிக்க முடியும். மறுபுறம் இப்பணியில் ஈடுபடும் போது தன்னையும் அறிந்து கொள்ள முடியும். தேசிய இசை வளர்ச்சிக்கான தத்துவத்தைத் தொகுத்து ஆராயவும் முடியும் என்றார் அவர்.
1 2 3 4
|