கிழக்கு சீனாவின் கடலோரத்திலுள்ள சே சியாங் மாநிலம், வளமிக்க மாநிலங்களில் ஒன்றாகும். சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி சீனாவில் நடைமுறைக்கு வந்த பின், இங்குள்ள அரசு சாரா தொழில் நிறுவனங்கள், பெரும் சாதனை ஈட்டியுள்ளன. ஆனால், சீனச் சந்தையின் வெளிநாட்டுத் திறப்பு அளவு மேலும் விரிவடைவதுடன், அவை பெரும் போட்டி நிர்ப்பந்தத்தை எதிர்நோக்குகின்றன. இந்நிலைமையை மாற்றும் பொருட்டு, தற்போது, தொழில் நிறுவனத்தின் நிர்வாக அமைப்பு முறையை முழுமைப்படுத்தி, போட்டியாற்றலை உயர்த்தி, புதிய வளர்ச்சி வாய்ப்பைத் தேடிக் கண்டறிய, சே சியாங் மாநிலத்தின் அரசு சாரா தொழில் முனைவோர் பாடுபடுகின்றனர்.
தொழில் நடத்தும் முன், இத்தொழில் முனைவோரில் பெரும்பாலோர் விவசாயி, தொழிலாளர், கைத்தொழிலாளர் ஆகியோராக இருந்தனர். தொழில் நடத்திய தொடக்கத்தில், மூலதனப் பற்றாக்குறை, நிர்வாக அனுபவம் இன்மை ஆகியவற்றினால் சிரமப்பட்டனர். ஆனால், இந்த சாதகமற்ற காரணிகள், அவர்கள் தாழ்ந்த நிலையில் வளர்ந்து, தொழில் முனைவோராக மாறுவதைப் பாதிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, அவர்கள் வளம் பெறும் முக்கிய காரணங்களை நிபுணர் ஆதாராய்ந்து வருகின்றனர்.
1 2 3 4
|