போர் தளத்தில் வெற்றி பெறுவது போல், சந்தையில் வளர்ச்சியுறுவதற்கு துணிச்சலும் புதுமை எழுச்சியும் வேண்டியிருக்கிறது. சே சியாங் தொழில் முனைவோர் வெற்றி பெறுவதற்கு இது தான் காரணமாகும். வென் சோ ஔ காங் குழுமம் இயக்குநர் குழுவின் தலைவர் செங் சியோ காங், துணிச்சல் மிக்கவர். அவர் நடத்திய தொழில் நிறுவனம், சீனாவின் தோல் காலணி உற்பத்தி தொழில் துறையில் 3வது இடம் வகிக்கிறது. ஆனால், உள் நாட்டில் ஈட்டியுள்ள மேம்பாடு குறித்து அவர் மனநிறைவு அடையவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், அவர் வெளிநாட்டில் முதலீடு தெய்து, சிறப்புக் கடையை நிறுவினார். அவர் கூறியதாவது—
"வெளிநாட்டில் நான் சிறப்புக் கடையை நிறுவி 2 ஆண்டுகளாகி விட்டது. 2001ஆம் ஆண்டில், பிரெஞ்சு தலைநகரான பாரிஸை, நான் முதலில் தேர்ந்தெடுத்தேன். இத்தாலியின் மிலான், ரோம், நபோலி, அமெரிக்காவின் நியுயார்க், ஸ்பெயினின் பார்சலோனா உள்ளிட்ட 10க்கு அதிகமான நாடுகளின் மாநகரங்களும் என் தெரிவில் இடம்பெறுகின்றன. சீனாவின் சின்னங்கள் உலகில் பரவ வேண்டும் என்பதை எனது நோக்கமாகும்" என்றார் அவர். 1 2 3 4
|