45 வயதான லீ சி நின் குள்ளமானவர். திறமை மிக்கவர். கடக்கடவென்று பேசுபவர். உணர்ச்சி மிக்கவர்.
அவர் குட்டிக்கரணக் கலையைப் பயின்றதில்லை. இளம் வயதிலிருந்தே கலை ஜிம்னாஸ்டிக்ஸை விரும்பி, எதிர்காலத்தில் ஒரு ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராக விளங்க வேண்டுமென அவர் உறுதி பூண்டிருந்தார். 1978ல் அவர் செங்து விளையாட்டுக்கலை கல்லூரியில் சேர்ந்தார். சீனாவின் முதலாவது தொகுதி கலை ஜிம்னாஸ்டிக்ஸ் துறை மாணவியாக மாறினார். கல்லூரியில் கல்வி பயின்ற போது நல்ல மதிப்பெண் பெற்றார். அனைத்து சீனக் கலை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், இரண்டாவது இடம் பெற்றார். பட்டம் பெற்ற பின் அவர் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியாளராகப் பணியாற்றலானார்.
குட்டிக்கரண நிகழ்ச்சியுடன் அவர் தொடர்பு கொண்டது. தற்செயலாக நிகழ்ந்தது.
1 2 3 4 5
|