சீனப் பாரம்பரிய குட்டிக்கரணக் கலையானது, இன்னல் மிகுந்த செயல் மற்றும் திறமையினால் பார்வையாளரை வென்றெடுத்தது. ஆனால் பார்வையாளரின் அதிகரித்து வரும் கண்டுமகிழ்தலுடன் ஒப்பிடும் போது, குட்டிக்கரண நிகழ்ச்சிகளில் துவக்கத்தன்மை எழுச்சி குறைவு. பல நிகழ்ச்சிகளில் கலை உணர்வு அழகும் கண்டுகளிப்பு மதிப்பும் குறைவு. இவற்றைச் சீர்திருத்தி புதுமையாக்குவதென லீ சி நின் தீரிமானித்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் நடன பயிற்சிக்கான அறிவியல் முறையை குட்டிக்கரண நடிகருக்கான பயிற்சியில் உட்புகுத்தி, அவர்களின் கலை உணர்வை பயிற்றுவதில் பெரும் கவனம் செலுத்தினார். குட்டிக்கரண கல்வி மற்றும் குட்டிக்கரண நிகழ்ச்சிகளை இயக்குவதில் அவர் நடனம் இசை முதலிய கலை நடையைத் துணை கொண்டு, குட்டிக்கரண நிகழ்ச்சியின் நுட்பத்தை செவ்வனே காட்டினார். இவ்வாறு கைத் திறன் என்ற தன் முதலாவது குட்டிக்கரண நிகழ்ச்சியை அவர் இயக்கிய போது, நிலா ஒளியில் மூழ்கிய ஒரு ஜோடி காதலர் மெல்லிய குரலில் உரையாடும் காட்சியை வடிவமைத்தார். இந்நிகழ்ச்சி 1986 சீனக் குட்டிக்கரண நிகழ்ச்சி போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.
1 2 3 4 5
|