1986ல் குவான் சியின் குட்டிக்கரண குழு ஒன்று, தமது குட்டிக்கரண நடிகருக்கு உடல் வடிவ கலை பாடம் கறிபிக்குமாறு அவரை அழைத்தது. அவருடைய எழில் மிக்க உடல் மாதிரியும் போதனா முறையும் மாணவர்களை ஈர்த்துள்ளன. 3 திங்கள் பயிற்சிக்குக் பின், நடிகர்களின் தொழில் திறன் விரைவாக உயர்ந்தது. இக்குழு அவரை தமது குழுவில் சேர்த்துக் கொண்வதென மேற்கொண்டது. முதன்முறையாக குட்டிக்கரண கலையுடன் தொடர்பு கொண்ட லீ சி நின் இந்தப் பழமையான கலை மீது பேரார்வம் கொண்டார். ஆனால் இக்கலையின் நிலவிய பின் தங்கிய நிலைமையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் கூறியதாவது—
"எங்கள் குட்டிக்கரணக் கலை மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாக கருதினேன். குட்டிக்கரண நுட்பம் இவ்வளவு தலைசிறந்து விளங்குகின்றது. ஆனால், செய்து காட்டல் பயிற்சி இவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளது. எங்கள் குட்டிக்கரண கலையை மேலும் வளர்ச்சியுறச் செய்யும் வகையில், நான் ஏதேனும் செய்யலாம் என கருதிவேன்" என்றார் அவர். அதனால், தாம் விரும்பிய கலை ஜிம்னாஸ்டிக்ஸ் பணியிலிருந்து விலகி, குட்டிக்கரண இயக்குநராக மாறுவதென முடிவு மேற்கொண்டார்.
1 2 3 4 5
|