1994ல் தங்க நிற தென்றல் என்ற தலைப்பில் குட்டிக்கரண நிகழ்ச்சியைப் படைத்தார். இது அரங்கேற்றப்பட்டதும் சீனாவின் குட்டிக்கரண வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் இயற்றிய 20 களம் குட்டிக்கரண நிகழ்ச்சிகள் சீனா தவிர, ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
1999ல் உலகப் புகழ் பெற்ற கனேடிய சூரியன் குட்டிக்கரண குழுவுடன் ஒத்துழைத்து, டிராகனும் சிங்கமும் எனும் குட்டிக்கரண நிகழ்ச்சியின் இயக்குநராக அவர் பணியாற்றினார். இது சுமார் 40 ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் பிரதேசங்களில் 1500 முறை அரங்கேற்றப்பட்டது. மொத்தம் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் இதைக் கண்டுகளித்தனர். சீன குட்டிக்கரண சூறாவளி என இது அழைக்கப்பட்டது.
லீ சி நின் அம்மையார், இப்போது சீனக் குட்டிக்கரண சங்கத்தின் துணைத் தலைவரும் குட்டிக்கரண வட்டாரங்களின் செல்வாக்குடைய நிபுணருமாவார். இப்போது மிகவும் பரப்பரப்பாக உள்ள அவர் கூறியதாவது—
"இப்போது ஒரு நிகழ்ச்சியை திரும்பவும் இயக்குவதில் எனக்கு அக்கறை இல்லை. மிகவும் அறைகூவலுக்குரிய இன்னல் மிகுந்த நிகழ்ச்சிகள் மீது மட்டும் அக்கறை செலுத்துகிறேன்" என்றார் அவர். 1 2 3 4 5
|